ஏப்ரல் 29, பழனி (Dindigul News): ஈரோடு (Erode) நகரில் இருந்து திருநெல்வேலியில் (Tirunelveli) அமைந்துள்ள தனியார் நிறுவனத்திற்கு கனரக லாரி (Chemical Lorry) பாலி அலுமினிய குளோரைடு பாரம் ஏற்றிக்கொண்டு பயணம் செய்தது. லாரியை தேவராஜ் என்பவர் இயக்கி வந்துள்ளார். இந்த வாகனம் அதிகாலை 4 மணியளவில் திண்டுக்கல் - பழனி சாலையில் உள்ள கன்னிவாடி புதுப்பாலம் பகுதியில் வந்துள்ளது.

அப்போது,லாரி பழுதான காரணத்தால், அதனை ஓரமாக நிறுத்திய ஓட்டுநர் பழுது நீக்கம் செய்யும் கடை குறித்து விசாரித்துக்கொண்டு இருந்துள்ளார். அந்த சமயத்தில், அவ்வழியே கோயம்புத்தூரில் இருந்து தேனிக்கு அரசு பேருந்து வந்துள்ளது. பேருந்தை கோயம்புத்தூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜப்பெருமாள் (வயது 34) இயக்கியுள்ளார்.

பேருந்தின் நடத்துனராக வேல்முருகன் பயணம் செய்துள்ளார். பேருந்தில் 25 பயணிகள் பயணம் செய்துள்ளனர். அரசு பேருந்து ஓட்டுநர் லாரியை கவனிக்காமல் வந்ததால், அதன் மீது பேருந்து (Chemical Lorry Tamilnadu Govt Bus Collision) மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் விபத்திற்குள்ளாகி உயிருக்காக அலறி துடித்தனர். Website Hacked: அரசு போக்குவரத்து இணையத்தை முடக்கிய ஹேக்கர்.. ரூ.40 கோடிக்கு பிட்காயின் வாங்கச்சொல்லி மிரட்டல்.!

விபத்தை கண்ட அப்பகுதி மக்கள் கன்னிவாடி காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனருக்கு பின் இருக்கையில் அமர்ந்து பயணித்த கோயம்புத்தூர் மாவட்டம் சோமையனூர் தனுவாய் பகுதியை சேர்ந்த ஐயப்பன் (வயது 40) உயிரிழந்தார்.

ஐயப்பனின் மகள் விசாலினி (வயது 14), இராஜபாளையத்தை சேர்ந்த மகாலட்சுமி (வயது 23), உத்தமபாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 30), திருப்பூரை சேர்ந்த சுவேதா (வயது 25) உட்பட 22 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 9 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள்.

விபத்திற்குள்ளான லாரியில் இருந்து கெமிக்கல் ஆறுபோல ஓடியது. அது நெடியுடன் தோல் அரிப்பை ஏற்படுத்தும் தன்மையுடன் இருந்ததால், தீயணைப்பு படையினர் உதவியுடன் லாரி அப்புறப்படுத்தப்பட்டது. விபத்து குறித்து கன்னிவாடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.