UPSRTC Bus | Hacker (Photo Credit: TheStatesman.com / Pixabay)

ஏப்ரல் 28, லக்னோ (Uttar Pradesh News): உத்திரபிரதேச மாநில அரசு சார்பில் உத்திரபிரதேச மாநில போக்குவரத்து (Uttar Pradesh State Road Transport Corporation) கழகம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அம்மாநிலத்திற்குள்ளேயும் - மாநிலத்திற்கு வெளியேயும் அரசு சார்பில் பேருந்து போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.

பயணிகளின் வசதி மற்றும் போக்குவரத்துறையை நவீனப்படுத்த மாநில அரசு UPSRTC என்ற இணையப்பக்கத்தை நிர்வகித்து வருகிறது. இதன் வாயிலாக பயணிகள் பேருந்து பயணசீட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். Chennai Power Cut News: மக்களே கவனமாக இருங்கள்.. நாளை சென்னையில் மின்தடை எங்கெங்கு?.. லிஸ்ட் இதோ.!

இந்த நிலையில், ஹேக்கர் UPSRTC இணையப்பக்கத்தை ஹேக் செய்து, அதனுள் பதிவு செய்யப்பட்ட பயணிகளின் தனிப்பட்ட தரவுகளை திருடியுள்ளார். பின்னர், அதனை வைத்து அரசுத்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு ரூ.40 கோடி மதிப்பிலுள்ள பிட் காயினை வாங்கவேண்டும்.

நீங்கள் பணம் வாங்கினால் மட்டுமே உங்களின் இணையத்தை திருப்பி தருவேன். மேற்படி எனக்கு பிட்காயின் வாங்கி தராத பட்சத்தில், உங்களின் இணையப்பக்கத்தை திரும்ப பெற இயலாது என கூறியுள்ளார். இதனையடுத்து, விபரம் சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.