Dindigul Govt Bus Accident (Visuals form Spot)

ஜனவரி 24, சிறுமலை: திண்டுக்கல் மாவட்டத்தில் (Dindigul) உள்ள சிறுமலையில் விவசாய தோட்டங்கள் நிறைந்து காணப்படுகின்றன. விவசாய தோட்டத்தில் வேலை பார்க்க திண்டுக்கல் மட்டும் அதன் சுற்றுவட்டார கிராமத்தில் இருந்து தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை நேரத்தில் 18 பயணிகளோடு அரசு பேருந்து (Govt Bus) திண்டுக்கல்லில் இருந்து சிறுமலை நோக்கி புறப்பட்டு சென்றுகொண்டு இருந்தது. இந்த பேருந்தை தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தை சேர்ந்த விஜயகுமார் (வயது 40) என்பவர் இயக்கியுள்ளார்.

பேருந்தின் நடத்துனராக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கள்ளிப்பட்டியை சேர்ந்த சேகர் பணியாற்றியுள்ளார். நேற்று இரவு முதல் சிறுமலையில் சாரல் மழை பெய்ததால் காலையில் கடுமையான பனிமூட்டம் நிலவி வந்தது. இந்நிலையில், பேருந்து 18வது கொண்டை ஊசி வளைவில் பேருந்து பயணித்தது. Patiala Minor Girl Gang Raped: 11 வயது சிறுமி ஓடும் காரில் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. நெஞ்சை பதறவைக்கும் துயரம்..!

பேருந்து கொண்டை ஊசி வளைவில் பயணிக்கும்போதே காட்டு மாடு குறுக்கே புகுந்துகொள்ளவே, ஓட்டுநர் பேருந்தை ஓரமாக இயக்கி செல்ல முடிவெடுத்துள்ளார். அப்போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை (Govt Bus Lost Control Made Accident) இழந்த பேருந்து, பள்ளத்தில் தலைகுப்பற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 18 பயணிகளும் காயமடைந்து உயிருக்கு அலறி துடித்தனர். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பயணிகளை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். விபத்தில் சேலம் வெங்கடேஷ் (வயது 40), சிறுமலை பழனியம்மாள் (வயது 65), பாஸ்கரன் (வயது 63), கார்த்திக் (வயது 26) உட்பட 14 பேர் படுகாயத்துடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 24, 2023 10:43 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).