ஜூலை 24, சென்னை (Tamilnadu News): இன்றளவில் இருக்கும் இளைஞர்களுக்கு சினிமா மோகம் அதிகரித்துவிட்டது, எதிர்காலம் குறித்த பயம் இல்லை என்று பல விஷயங்களை மேற்கோள் காண்பித்து சில பேசி வருகிறார்கள்.
ஆனால், பல கஷ்டத்திலும் வேலைகளை பார்த்துக்கொண்டு, மறுபுறம் உழைத்து படிப்பை விடாத பல நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களின் சாதனைகள் அவர்களின் குடும்பத்திற்கு உறுதுணையாகவும், பிறருக்கு உத்வேகமாகவும் இருந்து வருகிறது. Udupi Falls Shocking Video: அருவியின் அழகை ரசித்தவாறு வழுக்கி விழுந்து நீரோடு இழுத்து செல்லப்பட்ட இளைஞர்; பதைபதைப்பு வீடியோ லீக்.!
இந்நிலையில், தனது கஷ்டத்திலும் ஜுமாடோ நிறுவனத்தில் டெலிவரி செய்யும் பணியாளராக வேலைபார்த்து, விக்னேஷ் என்ற இளைஞர் டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வு எழுதி வெற்றி அடைந்துள்ளார். இதனால் அவரின் குடும்பமே பெருமை கொண்டுள்ளது.
பல தோல்விகளுக்கு மத்தியில் குடும்பத்தின் நன்மைக்காகவும், அவர்களின் எதிர்காலத்திற்காகவும், தன்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்த பெற்றோருக்காகவும் தோல்விகளை கடந்து சாதனை படைத்ததாக விக்னேஷ் தெரிவித்தார்.