Chennai Central to Avadi Route Railway Station (Photo Credit: @DRMChennai X)

பிப்ரவரி 13, சென்ட்ரல் இரயில் நிலையம் (Chennai News): தலைநகர் சென்னையின் போக்குவரத்தில், மிகப்பெரிய பங்கை கொண்ட புறநகர் மின்சார (Chennai EMU Train Service) இரயில் சேவை, ஒருசில நேரங்களில் தண்டவாள பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படும். அந்த வகையில், சென்னையில் உள்ள கவரப்பேட்டை - பொன்னேரி இடையே தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று 23 புறநகர் மின்சார இரயில் சேவைகள் முற்றிலும் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் - நீதிமன்றம் அனுமதி.! 

இரயில்கள் ரத்து செய்யப்பட்டதன் விபரம் பின்வருமாறு.,

இதனால் சென்னை கும்மிடிப்பூண்டி, ஆவடி, நெல்லூர் - சூலூர்பேட்டை உட்பட பல்வேறு வழித்தடத்தில் இயங்கும் இரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை இரயில்வே கோட்ட மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, மூர் மார்க்கெட் - சூலூர்பேட்டை, மூர் மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை - நெல்லூர், மூர் மார்க்கெட் - ஆவடி ஆகிய வழித்தடத்தில் இயங்கும் 23 இரயில்கள் முற்றிலும் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது. இன்று காலை 09:00 மணிமுதல் மாலை 03:00 மணிவரை இரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

சென்னை கோட்ட மேலாளர் இரயில்கள் ரத்து தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பு: