பிப்ரவரி 12, சென்னை உயர்நீதிமன்றம் (சென்னை News): அதிமுக உட்கட்சி விஷயத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர், அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை ஏற்பட்டு, கட்சி 3 பிரிவுகளாக உடைந்தது. இதில் டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை உண்டாக்கி செயல்பட்டு வருகிறார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், காட்சியிலேயே இருந்தாலும், பின்னாளில் கருத்து முரண் அதிகரித்து வெளியேறினார். Gold Rate Today: தங்கம் வாங்க சரியான நேரம்.. இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு.!
ஓ.பி.எஸ் தரப்பு முறையீடு:
இதனிடையே, உட்கட்சியில் நிலவும் பிரச்சனைக்கு தேர்தல் ஆணையம் விசாரித்து நீதியின் பக்கம் நிற்க வேண்டும். கட்சி சின்னம் உட்பட பிற விஷயங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் ஓ.பன்னீர் செல்வம், ஓ.பி ரவீந்திரநாத் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மேலும், கட்சியின் அதிகாரம் & தொண்டர்களின் செயல்பாடுகள் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியிடம் கட்சி தேர்தல் ஆணையத்தால் ஒப்படைக்கப்பட்டது. எனினும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பு தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய முடிவுகளை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
தேர்தல் ஆணையம் விசாரிக்க அனுமதி:
இந்த விசயத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள் தரப்பில் கூறுகையில், உட்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என கூறப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை இன்று நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை இல்லை என கூறியுள்ளது. இதனால் அதிமுக உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கும்.