மே 02, ஈரோடு (Erode News): ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி வேளாங்காட்டு பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் வயதான தம்பதி ராக்கியப்பன் (வயது 75) - பாக்கியம் (வயது 60) வசித்து வந்தனர். இவரது மகன் கவிசங்கர், முத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக பெற்றோருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் போனை எடுக்காததால், சந்தேகமடைந்த அவர், நேற்று இரவு அருகில் உள்ளவர்களை பார்க்க சொல்லியுள்ளார். அப்போது, அவர்கள் இருவரும் கொலை (Double Murder) செய்யப்பட்ட நிலையில், இறந்து கிடந்துள்ளனர். Tiruppur News: மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற கணவன்.. ஆசையாக அழைத்துச்சென்று பயங்கரம்.. திருப்பூரில் கொடூரம்.!
வயதான தம்பதி கொலை:
இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக நடத்திய விசாரணையில், மர்மநபர்கள் வயதான தம்பதியை அடித்துக் கொலை செய்துவிட்டு, மூதாட்டியிடம் இருந்த 15 சவரன் நகைகள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. தொடர்ந்து, 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளுக்கு காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.