மே 02, திருப்பூர் (Tiruppur News Today): திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகேயுள்ள பகுதியில் பெண் ஒருவரின் தலையில் கல்லைப்போட்டு கொலை சம்பவம் நடந்தது. கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அங்கிருந்த சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, செவிலியர் உடலியல் பெண் ஒருவரும், அவருடன் கைலியை ஏத்திக்கட்டி வீராப்பு நடையுடன் பயணித்த ஆணின் வீடியோ பதிவுகளும் சிக்கியது. இந்த வீடியோவின் பேரில் மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார். மேலும், காதல் மனைவியின் தலையில் அவர் கல்லைப்போட்டு கொலை செயலில் ஈடுபட்டது அம்பலமானது. இதுகுறித்து காவல் அதிகாரிகள் கூறுகையில், "மதுரையைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணா - திருப்பூரைச் சேர்ந்த பல் மருத்துவமனை செவிலியர் சித்ரா, கடந்த 2014ம் ஆண்டு காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்துள்ளனர். திருமணத்துக்கு பின்னர் ராஜேஷ் கண்ணாவுடன் மதுரை வாடிப்பட்டி பகுதியில் வசித்து வந்த சித்ரா - ராஜேஷ் தம்பதிக்கு 2 குழந்தையும் இருக்கின்றனர். இதனிடையே, திருமணமான புதிதில் நல்லபடியாக இருந்த ராஜேஷ் கண்ணா கேடான சவகாசத்தால் மது, கஞ்சா, பெண் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார். 15 வயது வளர்ப்பு மகனுடன் உல்லாசம் அனுபவித்த சித்தியின் அதிர்ச்சி செயல்.. நேரில் கண்ட கணவனுக்கு பேரதிர்ச்சி.!
துள்ளத்துடிக்க நேர்ந்த கொடூரம்:
இதனால் கணவன் - மனைவி சண்டை தொடர்ந்த நிலையில், ஒருகட்டத்தில் மனைவி விரக்தி அடைந்துள்ளார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு குழந்தைகளுடன் திருப்பூரில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தவர், எதிர்காலத்துக்காக பல் மருத்துவமனையில் செவிலியராக வேலைக்கு சேர்ந்துள்ளார். சம்பவத்தன்று தான் திருந்திவிட்டதாக மனைவியிடம் சமாதானம் பேச வந்த ராஜேஷ் கண்ணாவை முதலில் பெண் நம்பினாலும், பின் சந்தேகம் ஏற்பட்டு கேள்வி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் கண்ணா மனைவியை கொலை செய்ய முற்பட்டு கழுத்தை நெரித்துள்ளார். இதில் தப்பி ஓடிய பெண்மணி இருட்டான பகுதியில் பதுங்கி இருந்தபோது, அவரின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்துள்ளது நடந்துள்ளது. மேலும், மனைவியை கொலை செய்த கையுடன் மாமியாரின் வீட்டுக்குச் சென்ற ராஜேஷ் கண்ணா எதுவும் நடக்காதது போல தனது குழந்தைகளை தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். தனது மகளை மருமகன் மற்றும் அவரின் குடும்பத்தினர் திட்டமிட்டு கொலை செய்து எனது பேரக்குழந்தைகளை அழைத்து சென்றுள்ளனர் என சித்ராவின் தாய் கண்ணீர் சோகத்தினை வெளிப்படுத்தினார்.