Father Kills Daughter & Commits Suicide in Ariyalur (Photo Credit: Facebook)

மே 12, ஆண்டிமடம் (Ariyalur News): அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த தம்பதி ரவி (வயது 50) - செல்வி (வயது 45). இவர்களுடைய மகள்கள் ரஞ்சனி (வயது 19), சந்தியா (வயது 17). இதில், ரஞ்சனி பி.எஸ்சி. நர்சிங் படித்து வருகிறார். சந்தியா, சமீபத்தில் வெளியான +2 தேர்வில் 600க்கு 520 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். Gold Silver Price: வாரத்தின் முதல் நாள் அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன..?

மகள், தந்தை சடலமாக மீட்பு:

இந்நிலையில், ரவி அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதனால், மனைவி செல்வி, மூத்த மகள் ரஞ்சனி ஆகியோர் புதிதாக கட்டும் வீட்டு வேலைகளை செய்து வந்தனர். இளைய மகள் சந்தியா, வீட்டில் சமையல் செய்து தனது தந்தை மூலம் தாயார் மற்றும் அக்காவிற்கு உணவு அனுப்பி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று (மே 11) மதியம் வெகுநேரமாகியும் வீட்டிலிருந்து உணவு வராததால் செல்வியும், ரஞ்சனியும் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, சந்தியா கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்டும், ரவி தூக்கில் தொங்கியவாறும் சடலமாக கிடந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் கதறி அழுதனர்.

போலீஸ் விசாரணை:

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில், தந்தை-மகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ரவி தனது மகளை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, பின்னர் தானும் தூக்குப்போட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.