ஆகஸ்ட் 24, தேனி (Theni News): தேனி மாவட்டம், அரண்மனைப்புதூர் முல்லை நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 35). இவர், தனியார் நிதி நிறுவன ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். மேலும், பைனான்ஸ் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவரது மனைவி அஜிதா (வயது 33). தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் (Love Marriage) செய்துகொண்டனர். இவர்களது மகள் பிரித்விகா (வயது 5). இந்நிலையில், சதீஷ்குமாருக்கு பைனான்ஸ் (Finance) தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக சதீஷ்குமார் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
இவரது மனைவி 5 மாத கர்ப்பிணியாக (Pregnant Wife) இருந்ததால், அவரும் வேலைக்கு செல்லவில்லை. இதனால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த கர்ப்பிணி மனைவியை, சதீஷ்குமார் கத்தியால் குத்திக்கொலை (Murder) செய்தார். பின்னர், மகள் பிரித்விகாவையும் கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு, சதீஷ்குமாரும் தூக்குப்போட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டார். Five Rupee Coin Stuck In Girl's Throat: 7 வயது சிறுமியின் தொண்டையில் சிக்கிய நாணயம்; துரிதமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்..!
இதனையடுத்து, நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 22) கண்டமனூரில் உள்ள அஜிதாவின் பெற்றோர், மகளை செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டும் எடுக்காததால் சந்தேகமடைந்தனர். உடனே, தங்கள் மகன் சுரேந்தருடன் அன்றிரவு அஜிதாவின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது, வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அக்கம்பக்கத்தினரிடம் விசாரிக்கையில், காலையில் இருந்து வீடு பூட்டியிருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் பழனிசெட்டிபட்டி காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் அளித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அஜிதா, மகள் பிரித்விகா கத்தியால் குத்தப்பட்டு சடலமாக கிடந்தனர். அதன் அருகில் சதீஷ்குமார் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். உடனே, மூவரின் உடல்களையும் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சேர்த்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.