Quarry (Photo Credit: @ThanthiTV X)

மே 20, சிங்கம்புணரி (Sivaganga News): சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி (Singampunari) அடுத்துள்ள மல்லாங்கோட்டை பகுதியில் மெகா ப்ளூ மெட்டல் என்ற தனியார் கல்குவாரி (Quarry) செயல்பட்டு வருகிறது. இங்கு, இன்று (மே 20) வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் மீது பாறை சரிந்து விழுந்தது. இதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து, இடிபாடுகளில் சிக்கிய மற்ற 3 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். Madurai News: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சோகம்.. பாட்டி, பேரன் உட்பட 3 பேர் பலி.!

போலீஸ் விசாரணை:

இதுகுறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் அர்ஜித், முருகானந்தம், ஆண்டிச்சாமி, ஆறுமுகம், கணேஷ் என்பது தெரியவந்துள்ளது. படுகாயமடைந்த மைக்கேல் என்ற தொழிலாளர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.