Madurai Building Collapse Accident (Photo Credit : Youtube)

மே 20, திருப்பரங்குன்றம் (Madurai News Today): மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், வளையான்குளம், முத்தாலம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர்கள் அம்மாசி அம்மாள் (வயது 70). இவரின் பேரன் வீரமணி (வயது 14). இவர்களது பக்கத்து வீட்டுப்பெண் வெங்கட் அம்மாள் (வயது 55). இவர்கள் மூவரும் நேற்று அம்மாசி அம்மாள் வீட்டின் முற்றத்தில் உட்கார்ந்து இரவு நேர உணவு சாப்பிட்டபடி பேசிக்கொண்டு இருந்தனர். Gold Silver Price: தங்கம் விலை அதிரடி குறைவு.. இன்றைய விலை நிலவரம் இதோ.!

3 பேர் பரிதாப பலி (Madurai Accident News Today):

கடந்த சில நாட்களாக பெய்த மழை, கடந்த பருவமழையின்போது பெய்த பேய் மழை காரணமாக அம்மாசி அம்மாளின் வீட்டின் முற்றத்தில் உள்ள மேற்கூரை வலுவிழந்து காணப்பட்டுள்ளது. இதனை யாரும் கவனித்ததாக தெரியவில்லை. இதனிடையே, நேற்று திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இரவு சுமார் 9 மணியளவில் மின்சாரம் இல்லாதபோது சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பெண்கள் இருவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சிறுவன் வீரமணி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.