செப்டம்பர் 26, திருப்பத்தூர் (TamilNadu News): திருப்பத்தூர் மாவட்டத்தின் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று அதிகாலை ஆம்பூர் பேருந்து நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்து சென்னைக்கு இறைச்சி கடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது.
இறைச்சிகள் அட்டைப்பெட்டிகளில் வைக்கப்பட்டு இரு சக்கர வாகனங்களில் ஆம்பூர் பேருந்து நிலையத்திற்கு கொண்டுவரப்படுவதாக தகவல்கள் வெளியானது. மேலும் இவை நடத்துனருக்குத் தெரியாமல் பேருந்துகளில் ஏற்றப்படுவதாக கூறப்பட்டது. Raghava Blessed by Rajinikanth: சந்திரமுகி 2 வெற்றியடைய ரஜினியை சந்தித்து ஆசிபெற்ற ராகவா லாரன்ஸ்: அசத்தல் தகவல் இதோ.! ரசிகர்கள் கொண்டாட்டம்.!
ஐந்து மணி நேரத்துக்கும் அதிகமான பயணம் என்பதால் இந்த பெட்டிகளில் இருந்து துர்நாற்றம் வர ஆரம்பித்தது.
இது குறித்து சம்பந்தப்பட்ட பயணிகளிடம் கேட்டபோது, அவர்கள் ஆர்டரின் பெயரில் தோல் பொருட்களை சென்னைக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பதாகக் கூறப்பட்டது.
சமூக வலைதளங்களில் வெளியான பதிவுகள் மற்றும் புகைப்படங்களின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
அவர்கள் சென்னைக்கு செல்லும் எந்தப் பேருந்திலும் பெட்டிகள் ஏற்றப்படவில்லை என்று தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் வெளியான தகவல் உண்மையா? என்பதை உறுதிப்படுத்த தொடர்ந்து அடுத்த சில நாட்களுக்கு கண்காணிப்பை மேற்கொள்ள போவதாக கூறினர்.
இந்தச் சம்பவம் எப்படி காலையில் இத்தனை சீக்கிரமாக நடந்திருக்கக்கூடும் என்று அதிகாரியிடம் கேட்டபோது அவர், “காலை ஐந்து மணிக்கு மாடுகள் இறைச்சிக்காக அறுக்கப்படும் என்றும், இறைச்சி சென்னைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றால், அது காலையிலேயே பேருந்து நிலையத்தை வந்தடையும்.” என்று தெரிவித்தார்
மூன்று மாதங்களுக்கு முன்பு இதே போல சென்னைக்கு நாய்கள் இறைச்சி கடத்தப்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், அது நாய் இறைச்சி இல்லை, அவை மாடு மற்றும் ஆட்டின் இறைச்சி தான் என்பதை உறுதி செய்தனர். மேலும் அது நாட்றம்பள்ளியில் தொழிலாளி ஒருவர் ஊதிய பிரச்சனைக்காக உருவாக்கிய வதந்தி என்பது தெரிய வந்தது.