சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் - ராகவா லாரன்ஸ் (Photo Credit: Twitter)

செப்டம்பர் 26, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் நடன இயக்குனராக களமிறங்கி, பின்னாளில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி நடிப்பில் களமிறங்கியவர் ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence). ரஜினியின் ரசிகராக இருக்கும் ராகவாவுக்கு, ரஜினி ரசிகர்களும் ரசிகராக மாறிப்போயினர்.

பேய் கதையம்சம் கொண்ட திரைபடங்களை பெரும்பாலும் தேர்ந்தெடுத்து நடித்து மக்களின் மனதை வென்ற ராகவா, ஆசிரமம் வைத்து ஏழை-எளிய மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஓயாது உதவி செய்து வருகிறார்.

இயக்குனர் பி. வாசு (Director Vasu) கடந்த 2005ம் ஆண்டு இயக்கிய சந்திரமுகி (Chandramukhi) திரைப்படம் ரஜினியின் (Rajinikanth) திரையுலக வாழ்க்கையை மிகப்பெரிய சரிவுக்கு பின்னர் இமாலய வெற்றியாக அமைத்து கொடுத்தது. இந்த படத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா (Nayanthara), வடிவேலு (Vadivelu), மனோபாலா, நாசர் உட்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். Theni Shocker: அரசு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் படுத்த படுக்கையாக கட்டிடத்தொழிலாளி; தேனியில் நடந்த பகீர் சம்பவம்.. கண்ணீரில் குடும்பத்தினர்.! 

இந்நிலையில், கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பின்னர் பி.வாசுவின் இயக்கத்தில் சந்திரமுகி 2 (Chandramukhi 2) திரைப்படம் எடுக்கப்பட்டது. சந்திரமுகி படத்தின் தொடர்ச்சியாக மற்றும் சந்திரமுகியின் கதைக்களத்தை விவரிக்கும் பொருட்டு எடுக்கப்பட்டுள்ள திரைப்படத்தில், ராகவா லாரன்ஸ் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். லைகா ப்ரொடெக்சன்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்து வழங்குகிறது.

ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், ராதிகா சரத்குமார், வடிவேலு, மஹிமா நம்பியார், லட்சுமி மேனன் (Lakshmi Menon), ஸ்ருஷ்டி டாங்கே உட்பட பலர் நடித்து செப். 28ம் தேதி படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் வெளியீடுக்கு முன்பு ராகவா லாரன்ஸ், நடிகர் ரஜினிகாந்த நேரில் சந்தித்தார்.

சென்னை போயஸ் கார்டனில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு நேரில் சென்ற ராகவா லாரன்ஸ், ரஜினிகாந்தின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து, ஜெயிலரின் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு ராகவா லாரன்ஸ், தான் மகிழ்ச்சியாக இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.