ஜனவரி 25, புதுடெல்லி (New Delhi): இந்தியாவின் உயரிய விருதுகளில் முக்கியமானதாக கருதப்படும் பத்ம விருதுகள் பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, சிவில் சேவை போன்ற பல்வேறு துறைகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. உயர்மட்ட சேவையில் சிறப்பான சேவைக்காக 'பத்ம பூஷண்' மற்றும் எந்தவொரு துறையிலும் சிறப்பான சேவைக்கு 'பத்மஸ்ரீ' விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று இந்த விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக மார்ச் / ஏப்ரல் மாதங்களில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாக்களில் இந்தியக் குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகின்றன. 2025 ஆம் ஆண்டிற்கான 139 பத்ம விருதுகளை வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். 7 பேருக்கு பத்ம விபூஷண், 19 பேருக்கு பத்ம பூஷண், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருது பெற்றவர்களில் 23 பேர் பெண்கள் ஆவார்கள். #Breaking: 🥳 Padma Bhushan for Ajith Kumar: அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது 🏅 அறிவிப்பு; துள்ளல் கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள் 😍.!
தமிழகத்தை சேர்ந்தவர்கள் பத்ம விருதுகள் விபரம் (Padma Award 2025 Tamil Peoples List):
இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பத்ம விபூஷண் (Padma Vibhushan) விருதுகளை தமிழ்நாடு மாநிலத்தை சேர்ந்தவர்கள் இடம்பெறவில்லை. கலைத்துறையில் சிறந்து விளங்கிய நடிகர் அஜித் குமார் (Ajith Kumar), ஷோபனா சந்திரகுமார் (Shobana Chandrakumar) ஆகியோருக்கு பத்ம பூஷண் (Padma Bhushan) விருது வழங்கபடுகிறது. அதேபோல, வர்த்தகம் மற்றும் கைத்தொழில் பிரிவில் சிறந்து விளங்கிய நல்லி குப்புசாமி செட்டிக்கும் (Nalli Kuppuswami Chetti) பத்ம பூஷண் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. பத்ம பூஷண் விருது பெரும் 19 பேரில் 3 பேர் தமிழ்நாடு மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
பத்ம ஸ்ரீ விருதுகளை பெரும் தமிழர்கள் (Padma Sri Award Honored Tamil Peoples):
113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், கலைத்துறையில் சிறந்து விளங்கிய கலைத்துறையில் சிறந்து விளங்கிய குருவாயூர் துரை (Guruvayur Dorai), சமையல் துறையில் சிறந்து விளங்கிய தாமோதரன் (Damodaran), இலக்கியம் மற்றும் கல்வி - இதழியல் துறையில் சிறந்து விளங்கிய லட்சுமிபதி ராமசுப்பையார் (Lakshmipathy Ramasubbaiyer), அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் சிறந்து விளங்கிய எம்டி ஸ்ரீனிவாஸ் (M D Srinivas), கலைத்துறையில் சிறந்து விளங்கிய புரசை கண்ணப்ப சம்பந்தன் (Purisai Kannappa Sambandan), விளையாட்டில் ஆர். அஸ்வின் (R Ashwin), வர்த்தகம் & தொழில் துறையில் சந்திரமோகன் (R G Chandramogan), கலையில் ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி (Radhakrishnan Devasenapathy), இலக்கியம் & கல்வித்துறையில் சீனி விஸ்வநாதன் (Seeni Viswanathan), கலைத்துறையில் வேலு ஆசான் (Velu Aasaan) ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. 113 பத்ம ஸ்ரீ விருது பெரும் நபர்களில், 13 பேர் தமிழர்கள் ஆவார்கள்.