Crime Scene (Photo Credit: Pixabay)

மே 05, கோவை (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டம், சுந்தராபுரம் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த மூதாட்டி மனோன்மணி (வயது 80). இவரது மகன் முருகன் என்பவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். அவரது மரணத்துக்கான இழப்பீடுத் தொகை, கடந்த சில மாதங்களுக்கு முன் அவரது வாரிசுதாரர்களுக்கு வந்தது. அந்தவகையில், முருகனின் தாயார் மனோன்மணிக்கும் பணம் கொடுக்கப்பட்டது. Salem News: தடுப்புச்சுவரில் மோதி கோர விபத்து.. கணவன் - மனைவி சம்பவ இடத்திலேயே பலி..!

கழுத்தறுத்து கொலை:

இந்நிலையில், இழப்பீடு பணத்தை தனக்கு கொடுக்குமாறு முருகன் மகன் சிவக்குமார் (வயது 25), தனது பாட்டியிடம் கேட்டுள்ளார். ஆனால், பாட்டி பணத்தை தர மறுத்தார். இந்நிலையில், இன்று (மே 0 5) மதியம் பாட்டியை தேடி வந்த பேரன் சிவக்குமார், மீண்டும் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். பணத்தை தர மறுத்த பாட்டியை, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தறுத்து கொடூரமாக (Murder) கொன்றுவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

போலீஸ் வலைவீச்சு:

இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த பாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சிவகுமாரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.