அக்டோபர் 24, நுங்கம்பாக்கம் (Chennai News): தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கிறது. வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக, மாநிலத்தில் மழை தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் தெற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழை பெய்து வந்த நிலையில், அது புயலாக வலுப்பெறும் சாத்தியக்கூறுகள் இல்லாத காரணத்தால் மழை குறைந்தது. இதனிடையே இன்று வங்கக்கடல் பகுதியில் உருவாகிய புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. Gold Rate Today: அதிரடி காட்டும் தங்கம்.. மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்வு.. இன்றைய விலை நிலவரம்.!
புயலாக உருமாறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்:
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அக்டோபர் 26 ஆம் தேதி வலுப்பெற்று புயலாக மாறுகிறது. வங்கக்கடலில் நிலவு வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் அக்டோபர் 27ஆம் தேதி புயலாக வலுப்பெற இருக்கிறது. மேலும் புயல் உருவாகும் பட்சத்தில் தாய்லாந்தின் பரிந்துரைப்படி 'மோன்தா' (Montha) என்ற பெயர் வைக்கப்படும். மோன்தா என்றால் வலிமை என்று பொருளாகும். புயலின் நகர்வுகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புயல் வரும் வாய்ப்பு குறைவாக இருந்தாலும், கனமழை தொடரும். புயலின் நகர்வுகளை பொறுத்து மழையில் மாற்றம் இருக்கும். பிற அறிவிப்புகள் அடுத்தடுத்து ஆராய்ந்து வெளியிடப்படும். தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் பட்சத்தில், தமிழகத்தில் பருவமழை வாய்ப்புகள் கூடுதலாக அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தவறான ஊசியால் நீல நிறத்தில் மாறி அழுகிய பச்சிளம் குழந்தையின் கை.. பெற்றோர்களே உஷார்.!
எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
இதனை தொடர்ந்து தமிழகத்துக்கு அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 24 ஆம் தேதியான இன்று கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 25ஆம் தேதியான நாளை கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரிக்கு கனமழைக்கான அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 26 ஆம் தேதியை பொறுத்தவரையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 27ஆம் தேதி பொறுத்தவரையில் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை பகுதிகளுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் பகுதிகளுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 28ஆம் தேதியை பொறுத்தவரையில் திருவள்ளூர், ராணிப்பேட்டை பகுதிகளுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் குறித்த நகர்வுகளை விண்டியில் நேரலையில் காணுங்கள் (Windy Cyclone Update):