ஜூன் 27, சென்னை (Chennai News): தென்மேற்கு பருவமழையின் காரணமாக கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் உட்பட பல மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடமாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

திரும்பும் இடமெல்லாம் எங்கும் நகரங்கள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இன்று கேரளா மாநிலத்திற்கு ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

இந்த நிலையில், இன்று பல இந்திய மாநிலங்களில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூரில் தக்காளி விலை கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. Leo Naa Ready Song: நடிகர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை; சர்ச்சையை சந்தித்த லியோவின் முதல் பாடல்.!

கடந்த சில நாட்களாக கிலோ ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி, தற்போது மழையின் காரணமாக வரத்து குறைந்து ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூரில் தக்காளி விலை மழை காரணமாக வரத்து குறைந்து ரூ.100-க்கு கிலோ விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் டெல்லியிலும் கிலோ தக்காளி விலை ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலத்திலும் தக்காளியின் விலையானது கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் தக்காளியின் விலை கிலோ ரூ.80 முதல் ரூ.120 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.