Cuddalore Shocker: அதிமுக நிர்வாகி மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக்கொலை; கடலூரில் பரபரப்பு.!
46 வயதாகும் அதிமுக நிர்வாகி மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜூன் 30, கடலூர் (Cuddalore Crime News): கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆலை காலனி பகுதியில் வசித்து வருபவர் புஷ்பநாதன் (வயது 46). இவர் அதிமுக நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். இன்று இவர் வட்டிபாளையம் முருகன்கோவில் பகுதியில் இருந்தார். அச்சமயம் அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று, புஷ்பநாதனை சுற்றிவளைத்தது. பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதால், புஷ்பநாதன் நிலைமையை உணர்ந்து தப்பிச்செல்ல முயன்றும் பலனில்லை. புஷ்பநாதனை சரமாரியாக வெட்டிகொலைசெய்த மர்ம நபர்கள், அங்கிருந்து தப்பியோடினர். Medical Negligence: மூட்டில் காயம்பட்ட சிறுவனுக்கு, அந்தரங்க உறுப்பில் அறுவை சிகிச்சை; அதிர்ச்சி கொடுத்த அரசு மருத்துவர்கள்.!
மர்ம கும்பலுக்கு வலைவீச்சு:
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. அரசியல் காரணத்திற்காக புஷ்பநாதன் கொலை செய்யப்பட்டாரா? வேறு காரணமா? என விசாரணை நடக்கிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு சூழலும் உண்டாகி இருப்பதால், பாதுகாப்பு கருதி காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி விபரங்கள் காத்திருக்கின்றன.
(The above story first appeared on LatestLY on Jun 30, 2024 09:17 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

