Liquor | Crime File Pic (Photo Credit: Pixabay)

மார்ச் 07, சாத்தூர் (Virudhunagar News): விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள தாயில்பட்டி கலைஞர் காலனியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 40). இவரது மனைவி முனீஸ்வரி (வயது 35). இவர்கள் இருவரும் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியருக்கு 3 மகள்கள் உள்ளனர். சமீப காலமாக கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. Cuddalore Shocker: கஞ்சா விற்பனைக்கு மாணவர்களை வற்புறுத்தி தாக்கிய கும்பல்; கடலூரில் பகீர்.. ஷாக் வீடியோ லீக்.. கதறும் மாணவர்கள்.!

குடும்ப தகராறு:

இந்நிலையில், இருவரும் சாத்தூர் அருகே உள்ள ஒரு கோயிலுக்குச் சென்றுவிட்டு, இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, மது போதையிலிருந்த பொன்னுச்சாமிக்கும், அவரது மனைவி முனீஸ்வரிக்கும் வீடு திரும்பியதும் மீண்டும் தகராறு (Family Dispute) ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பொன்னுச்சாமி மனைவியை அடித்து, அருகில் இருந்த உரல் கல்லை அவரது தலையில் போட்டுள்ளார். இதில் படுகாயமடைந்து நிலைக்குலைந்த முனீஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மனைவி கொலை:

அதன்பின், தனது பைக்கில் இருந்து பெட்ரோல் எடுத்து வந்த பொன்னுச்சாமி, அவரது உடலில் ஊற்றித் தீ வைத்து (Murder) எரித்துள்ளார். குடிபோதையில் இருந்த பொன்னுச்சாமி மீதும் தீப்பற்றி காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த வெம்பக்கோட்டை காவல்துறையினர், முனீஸ்வரி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தீக்காயமடைந்த பொன்னுச்சாமியை கைது செய்த காவல்துறையினர், சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.