ஜனவரி 16, புதுடெல்லி (New Delhi): கடந்த 2000 ஆம் ஆண்டு அண்டர் 19 பிரிவில் இந்திய அணிக்காக விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர் திவாகர், தோனியின் வளர்ச்சிக்கு பின்னர் திவாகரும் - தோனியும் நண்பர்களாகினர். இதனிடையே, திவாகர் மற்றும் அவரது மனைவி சௌமியா தாஸ் சார்பில் உருவாக்கப்பட்ட ஆர்கா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் சார்பில் உலகெங்கும் தோனி கிரிக்கெட் அகாடமி திறக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இது குறித்து இருதரப்பும் ஒப்பந்தம் கையெழுத்துட்டு உடன்படிக்கை பரிமாறிக் கொண்டது. பின்னாளில் இந்த ஒப்பந்தம் தோனி தரப்பால் ரத்து செய்யப்பட்டது.
இருதரப்பும் பரஸ்பரம் குற்றச்சாட்டு: தோனி தரப்புக்கு எதிராக மிஹிர் தரப்பு ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டு, அகாடமிகளை திறந்து இருக்கிறது. இதனால் ஒப்பந்தத்தை மீறியதாக திவாகருக்கு எதிராக தோனி தரப்பு குற்றச்சாட்டு முன்வைக்க, தனது பெயரை பயன்படுத்தி ரூபாய் 15 கோடி அளவில் மோசடி செய்ததாக திவாகருக்கு எதிராக ராஞ்சி நீதிமன்றத்தில் தோனி தரப்பு மனு தாக்கல் செய்தார். இந்த மனு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இது குறித்து தோனியின் தரப்பு வழக்கறிஞர் செய்தியாளர்கள் சந்திப்பையும் 06 ஜனவரி 2024 அன்று நடத்தி இருந்தார். Palamedu Jallikattu: களைகட்டிய பாலமேடு ஜல்லிக்கட்டு.. வெற்றியாளர்கள் யார்? பரிசு என்ன? எத்தனை பேர் காயம்? முழு தகவல் இதோ.!
கணவன் மனைவியாக தோனிக்கு எதிராக மனுதாக்கல்: இந்த நிலையில், தங்களின் மீது அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் தோனி மனுதாக்கல் செய்துள்ளார். தங்களுக்கு எதிராக பல சமூக ஊடகங்களில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் நீக்க வேண்டும். இதனால் எங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தத்தை மீறி நடந்த தோனியின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பல்வேறு கருத்துக்களை முன்வைத்து மிஹிர் திவாகர் மற்றும் அவரது மனைவி சௌமியா தாஸ் சார்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு ஜனவரி 18ஆம் தேதி விசாரணைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.