![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2023/08/Crime-File-Pic-Photo-Credit-Pixabay-380x214.jpg)
மார்ச் 23, எண்ணூர் (Chennai Crime News): சென்னையில் உள்ள எண்ணூர், ஆதிதிராவிடர் காலனியில் வசித்து வருபவர் பவுல் ராஜ் (வயது 19). இவர் தனது தந்தையோடு கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வீட்டில் இருந்த பவுல் ராஜுக்கு, செல்போனில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதனை ஏற்றுக்கொண்டு வெளியே புறப்பட்டு சென்றவர், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. மகன் மறுநாள் வீட்டிற்கு வந்துவிடுவார் என பெற்றோரும் அமைதியாக இருந்துள்ளனர்.
சடலமாக உடல் மீட்பு: இந்நிலையில், நேற்று காலை நேரத்தில் எண்ணூர், தாழங்குப்பம் கடற்கரை எதிர்புறம் இருக்கும் காலி மைதானத்தில் பவுல் ராஜின் தலை, கை-கால்களில் பலத்த வெட்டுக்காயத்துடன் கொலை செய்யப்பட்டவாறு சடலமாக கிடந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். Kalvan Movie Trailer: பரபரப்புடன் அனல்பறக்கும் காட்சிகள்.. ஜிவி பிரகாஷின் 'கள்வன்' பட டிரைலர் இதோ.!
![](https://cmstamil.letsly.in/wp-content/uploads/2024/03/Murder.jpg)
காதல் விவகாரத்தால் நடந்த கொலை: நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பவுல்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், பவுல்ராஜ் அப்பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் இளம்பெண்ணின் அண்ணனுக்கு பிடிக்கவில்லை என்று தெரியவருகிறது.
மைதானத்திற்கு வரவழைத்து சம்பவம்: இருவரையும் காதல் விவகாரம் தொடர்பாக இளம்பெண்ணின் சகோதரர் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. இதனை கேட்காத காதல் ஜோடி, தொடர்ந்து தங்களின் காதலில் உறுதிபட இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண்ணின் சகோதரர், தனது நண்பர்களுடன் சேர்ந்து பவுல்ராஜை காலி மைதானத்திற்கு சம்பவத்தன்று வரவழைத்துள்ளார். அங்கு இருதரப்பு வாக்குவாதம் நடந்து, பவுல்ராஜ் கத்தியால் வெட்டி கொல்லப்பட்டுள்ளார் என்பது உறுதியானது. Delhi Metro Holi Celebration Atrocity: மெட்ரோ இரயிலா? கட்டில் மெத்தையா?.. இளம்பெண்களின் செயலால் அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்.! வீடியோ உள்ளே..!
4 பேரிடம் விசாரணை தொடருகிறது: மேற்கூறிய தகவலை அறிந்த காவல் துறையினர் இளம்பெண்ணின் சகோதரர் உட்பட 4 பேருக்கு எதிராக வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.