ஜூன் 02, சென்னை (Chennai News): வீடுகளில் பாதுகாப்புக்காகவும், மனத்திருப்திக்காகவும் ஆசையாக வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள், இன்றளவில் தெருநாய்களை காட்டிலும் மிகப்பெரிய மூர்க்கத்தனம் கொண்ட வகைகளாக உருப்பெற்று இருக்கிறது. ராட்வீலர், ஜெர்மன் ஜெப்பட், பாக்ஸர், புல் டாக் உட்பட பல நாய்கள் மனிதர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எண்ணங்களை கொண்டவை ஆகும். இவை மூர்க்கமாவதும், அதன் குணங்கள் மாறும் கணிக்க இயலாதவை என்பதால், அதன் உரிமையாளர்களால் கவனித்துக்கொள்ளப்படும் செல்லப்பிராணிகள் வெளியே பிறரை தாக்குவது தொடருகிறது.
அடுத்தடுத்த சர்ச்சையால் அமலான விதிமுறைகள்:
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த சிறுவன் ஒருவன் வளர்ப்பு நாயால் கடுமையாக தாக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து, சென்னை மாநகராட்சி நிர்வாகம் வீடுகளில் செல்லப்பிராணியாக நாய்களை வளர்ப்போர் தங்களின் விபரங்களை தெரிவித்து நாய்கள் குறித்த தகவலை பதிவு செய்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். நாய்களுக்கு தடுப்பூசிகள் உரிய முறையில் செலுத்தப்பட்டு இருக்க வேண்டும் என நிபந்தனைகள் விதித்தது. அரசின் உத்தரவை மீறி செயல்பட்டு, எங்கேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு உரிமையாளர் பொறுப்பு எனவும் அறிவித்தனர். T20 WORLD CUP 2024: ஐசிசி ஆண்கள் T20 உலகக் கோப்பை: சொந்த மண்ணில் அமெரிக்க கிரிக்கெட் அணி தனது முதல் வெற்றியை உறுதி செய்தது..!
மிதிவண்டியில் சென்ற சிறுவனை பாய்ந்து தாக்கிய நாய்கள்:
இதனிடையே, சனிக்கிழமையான நேற்று சென்னையில் உள்ள புழல், லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த 8ம் வகுப்பு பயிலும் மாணவர், மிதிவண்டியில் செல்லும்போது பயிற்சிக்கு அழைத்து வரப்பட்ட 2 ராட்வீலர் ரக நாய்களால் கடுமையாக தாக்கப்பட்டார். உடனடியாக மீட்கப்பட்ட சிறுவன் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். சிறுவனின் அண்டை வீட்டில் வசித்து வரும் நபர் 2 நாய்களை வளர்த்து வரும் நிலையில், அவரின் இளவயது மகன்கள் சம்பவத்தன்று நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்து வந்துள்ளனர். அச்சமயம் நாய் திடீரென மூர்க்கமாகி இருக்கிறது. நாயின் உரிமையாளர் மகனால் அதனை கட்டுப்படுத்த இயலாத நிலையில், நாய் மிதிவண்டியில் சென்ற 12 வயது சிறுவனை தாக்கி இருக்கிறது.
ஒரேநாளில் இருவேறு சம்பவம்:
இந்த சம்பவத்தின் பரபரப்பு சடங்குவதற்குள், சென்னை கே.கே நகர், டேங்க் காலனி பகுதியை சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகன் அன்பரசன் (வயது 16), சாலையில் நண்பர்களுடன் நேற்று இரவு 08:30 மணியளவில் சென்றுகொண்டு இருந்தபோது, உள்நாட்டு ரக செல்லப்பிராணியான நாயால் தாக்கப்பட்டார். அவர் தற்போது காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். சிறுவன் அன்பரசன் கேவி பள்ளியில் 12ம் வகுப்பு பயில காத்திருக்கிறார். கோடை விடுமுறையில் வீட்டில் இருந்தவர் தற்போது நாயின் தாக்குதலால் காயமடைந்துள்ளார்.