மார்ச் 28, மண்ணடி (Chennai News): சென்னையில் உள்ள மண்ணடி பகுதியில் வசித்து வருபவர் அக்ரம் ஜாவத். இவர் சொந்தமாக துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். 33 வயதுடைய அக்ரம் ஜாவத்துக்கு, பாத்திமா என்ற மனைவி இருக்கிறார். தம்பதிகள் இருவருக்கும் திருமணம் முடிந்து, நல்லபடியாக வாழ்ந்து வந்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, பாத்திமாவுக்கு பெண் குழந்தையும் பிறந்தது. இதனிடையே, அக்ரம் எப்போதும் தனது மனைவியின் மீது நடத்தை சந்தேகம் அடைந்து வந்துள்ளார். மேலும், நாம் இருவரும் கருப்பாக இருக்கும்போது, பிறந்த குழந்தை மட்டும் எப்படி வெள்ளையாக பிறக்கும்? என சந்தேகப்பட்டு வந்துள்ளார். உறவினர்கள், மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியும் பலன் இல்லை. இதனிடையே, கடந்த திங்கள்கிழமை, அக்ரம் தனது குழந்தையுடன் வீட்டில் தனியே இருந்தார். வானிலை: வரும் நாட்களில் வெப்பநிலை உயரும்.. வானிலை மையம் எச்சரிக்கை..!
மருத்துவ பரிசோதனையில் அம்பலமான உண்மை:
அப்போது, மனைவியின் மீதான சந்தேக எண்ணம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அக்ரம், குழந்தையை கழுத்தை நெரித்துக் கொலை செய்து இருக்கிறார். பின் ஒன்றும் தெரியாததுபோல் இருக்க, வீட்டில் குழந்தை மூர்ச்சையாகி இருப்பதாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. அப்போது, மருத்துவ பரிசோதனையில் குழந்தை உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் காவல்துறையினர் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தபோது, குழந்தை கழுத்து நெறிக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, அக்ரமை கைது செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமானது. இதனையடுத்து, அக்ரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.