Tambaram Govt Hospital (Photo Credit: @ANI X)

டிசம்பர் 06, பல்லாவரம் (Chennai News): சென்னையில் உள்ள பல்லாவரம்‌ (Pallavaram) கன்டோன்மென்ட்‌ பகுதி மற்றும்‌ பல்லாவரம்‌ பகுதிகளில்‌ குடிநீரில்‌ (Sewage Water) கழிவுநீர்‌ கலந்து, 2 பேர் பலியாகினர். 20 க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த அரசுத்தரப்பு, நேற்று காலை 9.00 மணி அளவில்‌ சிறு, குறு மற்றும்‌ நடுத்தர தொழில்‌ துறை அமைச்சர்‌ தாமோ. அன்பரசன்‌, பல்லாவரம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌, தாம்பரம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ பல்லாவரம்‌ மண்டலக்குழு தலைவர்‌ என அனைவரையும் பல்லாவரம்‌ கண்டோன்மெண்ட்‌ மற்றும்‌ தாம்பரம்‌ மாநகராட்‌ சிக்குட்பட்ட பல்லாவரம்‌ காமராஜர்‌ நகர்‌ பகுதிகளில்‌ ஆய்வு மேற்கொள்ள அனுப்பி வைத்தது.

3 பேர் பலி:

இந்த விவகாரத்தில் பல்லாவரம்‌ கண்டோன்மென்ட்‌ பகுதியில்‌ வசித்து வந்த வரலட்சுமி (வயது 88) மற்றும்‌ மோகனரங்கா (வயது 42) என்பவர், சிகிச்சை பலனின்றி உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர். மேலும்‌, தாம்பரம்‌ மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம்‌ காமராஜர்‌ நகர்‌ (வார்டு 13) பகுதியில் வசித்து வந்த, மாங்காடு பகுதியிலிருந்து தனது உறவினர்‌ விட்டிற்கு வந்த திரிவேதி என்பவர்‌ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்‌ போது உயிரிழந்தார். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புக்கு காரணம்‌ தரமற்ற உணவா? குடிநீரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என ஆய்வு நடக்கிறது. Heart Wrenching Tragedy: தென்னை மரத்தில் தேங்காய் பறித்தவருக்கு காத்திருந்த எமன்; மின்சாரம் தாக்கி பறிபோன உயிர்..! 

அதிகாரிகள் ஆய்வு, மாதிரிகள் சேகரிப்பு:

கழிவுநீர் குடிநீரில் கலந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில், மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்துறை அமைச்சர்‌ மா. சுப்பிரமணியன்‌ நேரில் ஆய்வு மேற்கொண்டார்‌.பல்லாவரம்‌ கண்டோன்மெண்ட்‌ பகுதியில்‌ ஐந்து இடங்களிலும்‌, தாம்பரம்‌ மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம்‌ காமராஜர்‌ நகர்‌ பகுதியில்‌ ஐந்து இடங்களில்‌ தண்ணீர்‌ மாதிரி பரிசோதனை செய்ய கிங்ஸ்‌ இண்ஸ்டியூட்‌ ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வகத்திலிருந்து 3 தினங்களுக்குள்‌ அறிக்கை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்களுக்கு மருத்துவ முகாம்:

மேலும்‌, இந்நிகழ்வை தொடர்ந்து தாம்பரம்‌ மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம்‌ காமராஜர்‌ நகரில்‌ தனியார்‌ குடிநீர்‌ வாகனம்‌ மூலம்‌ குடிநீர்‌ விநியோகம்‌ செய்த வாகனத்தை மாநகராட்சி மூலம்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டுள்ளது. பல்லாவரம்‌ கண்டோன்மெண்ட்‌ பகுதியில்‌ மூன்று இடங்களிலும்‌, தாம்பரம்‌ மாநகராட்‌சிக்குட்பட்ட பல்லாவரம்‌ காமராஜர்‌ நகரில்‌ மூன்று இடங்களில்‌ உள்ள பொதுமக்களுக்கு மருத்துவ முகாம்‌ மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு டாக்சிசைக்ளின்‌, எரித்ரோமைசின்‌, சிங்க்‌ மாத்திரைகள்‌ மற்றும்‌ ஓஆர்‌எஸ்‌ பவுடர்‌ வழங்கப்பட்டது.

3 பேரின் உயிரை வாங்கிய சோகம்: