
ஜூன் 22, பெரியமேடு (Chennai News): சென்னையில் உள்ள பெரியமேடு, நடேசன் தெருவில் வசித்து வருபவர் கோமதி (வயது 45). இவரின் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை எய்திவிட்டார். இதனால் கோமதி தனது மகன் முனீஸ் (வயது 17) என்பவருடன் வசித்து வருகிறார். சிறுவன் முனீஷ் புளியந்தோப்பு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பாலிடெக்னீக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் சரிவர கல்லூரிக்கு செல்லாமல் நண்பர்களுடன் சுற்றிவந்துள்ளார். Virudhunagar News: மனைவி, 2 குழந்தைகள் கொலை.. விருதுநகரில் பயங்கரம்.. தந்தை அதிர்ச்சி செயல்.!
காதல் தோல்வி தற்கொலை (Love Failure Suicide):
அதுமட்டுமல்லாது, முனீஷ் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் தினமும் பலமணிநேரம் செல்போனில் உரையாடி வந்துள்ளனர். இதனிடையே, திடீரென காதல் ஜோடிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இதனால் மனவேதனையடைந்த முனிஷ் தனிமையில் வாடி இருக்கிறார். நேற்று மாலை நேரத்தில் வீட்டில் ஆட்கள் இல்லாதபோது தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.