Virudhunagar Murder (Photo Credit: YouTube / Pixabay)

ஜூன் 21, அருப்புக்கோட்டை (Virudhunagar News Today): விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை, திருவிருந்தாள்புரம் கிராமத்தில் வசித்து வருபவர் சுந்தரவேலு. இவர் விவசாயி ஆவார். சுந்தரவேலுவின் மனைவி பூங்கொடி. தம்பதிகளுக்கு 10 வயதுடைய ஜெயதுர்கா, 7 வயதுடைய ஜெயலட்சுமி என இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.

சரிமாரியாக வெட்டிகொன்ற கணவன் :

குடும்ப பிரச்சனை காரணமாக அவ்வப்போது கணவன் - மனைவியிடையே வாக்குவாதம் நடந்து வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த சுந்தரவேலு தனது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளை அறிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். Kanyakumari News: பள்ளி தோழனை நம்பிய பெண் பலாத்காரம்.. நியாயம் கேட்ட பெண் மீது தாக்குதல்.! 

காவல்நிலையத்தில் சரண் :

இதனை தொடர்ந்து காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்த சுந்தரவேலு கூறிய தகவலை கேட்டு அதிர்ந்துபோன அதிகாரிகள் நிகழ்வு இடத்திற்கு விரைந்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்டனர். மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த அதிகாரிகள், சுந்தரவேலுவிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.