ஜூன் 29, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள தாம்பரம் ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் காமேஷ். இவர் ஒரகடத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரின் வீட்டருகே வசித்து வரும் நிஷா என்ற இளம்பெண்ணுக்கும், காமேஷுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியுள்ளது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், நிஷா இருங்காடு கோட்டையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்களின் காதல் தொடர்ந்து வந்த நிலையில், நேற்று காலையில் காதல் ஜோடி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றுள்ளது.
கம்பிகளுக்கு இடையே சிக்கிய டூவீலர் :
ஆனால் வேலைக்கு செல்லாமல் கோவளம் நோக்கி இருவரும் பயணத்தை தொடங்கிய நிலையில், இருசக்கர வாகனத்தில் வண்டலூர் - கேளம்பாக்கம் வழியாக சென்று கொண்டு இருந்தனர். அப்போது வண்டலூர் உயிரியல் பூங்கா பகுதியில் சாலைகளில் சில இடங்களில் கான்கிரீட் கம்பிகள் பெயர்ந்து கம்பிகள் நீட்டி கொண்டிருந்தன. இதனால் டூவீலர் கம்பிகளுக்கு நடுவே சிக்கிக் கொண்டு (Bike Accident) நிலைதடுமாறியதை தொடர்ந்து, அருகில் சென்ற பைக் மீது மோதாமல் இருக்க சாலையோரம் பைக்கை காமேஷ் திருப்பி இருக்கிறார். வானிலை: பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு.. இந்த 2 மாவட்டங்கள் உஷார்.. வானிலை மையம் அறிவிப்பு.!
காதலன் மடியில் பிரிந்த காதலியின் உயிர் :
அச்சமயம் சாலையில் கிடந்த மணல் சறுக்கி காதல் ஜோடி இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் காமேஷ் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நிலையில், நிஷா தலைக்கவசம் அணியாத காரணத்தால் பின்னந்தலையில் அடிபட்டு துடிதுடித்துள்ளார். இதனை கண்டு பதறிப்போன காமேஷ், நிஷாவை தூக்கி தனது மடியில் வைத்து கண்ணீருடன் அவசர ஊர்திக்காக காத்திருந்த சில வினாடியிலேயே காதலி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவலறிந்த கூடுவாஞ்சேரி காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து நிஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மகளின் உடலைக்கண்டு கதறிழுத குடும்பத்தினர் :
மேலும் இது குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மகளின் உடலை கண்டு கதறியழுதனர். இதனை தொடர்ந்து காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், காதலி தலைக்கவசம் அணியாததால் தலையில் அடிபட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மேலும் காமேஷிடம் ஓட்டுநர் உரிமமும் இல்லை. இருவரும் ஹெல்மெட் அணிந்து பயணித்து இருந்தால் விபத்தில் சிக்கியிருந்தாலும் சிறிய காயத்தோடு தப்பியிருப்பார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.