Chidambaram Tasmac | Cuddalore Floods 2024 (Photo Credit: Facebook)

டிசம்பர் 16, சிதம்பரம் (Cuddalore News): தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரத்தின் காரணமாக, கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெஞ்சல் புயல் கடுமையான மழையை வட மாவட்டங்களுக்கு தந்தது. அதனைத்தொடர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சில நாட்களுக்கு முன்பு டெல்டா மாவட்டங்கள், தென்மாவட்டங்கள் கடுமையான மழையை எதிர்கொண்டது. இதனால் சில இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியது.

தாழ்வான இடத்தில தேங்கிய நீர்:

இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், நாஞ்சலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு ஏதுவாக, நாஞ்சலூர் கிராமத்தில் ஒதுக்குப்புறத்தில் தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் மதுபான கடை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்த கனமழை - வெள்ளம் காரணமாக, நாஞ்சலூர் கிராமத்தின் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி காணப்படுகிறது. Tirupattur Shocker: கள்ளக்காதலர்களின் அடுத்தடுத்த அதிர்ச்சி செயல்.. 28 வயது இளம்பெண் மூச்சுத்திணறி துள்ளத்துடிக்க பலி..! 

குடிமகன் கோரிக்கை:

இதனால் குடிமகன்கள் சுமார் 1 கிமீ தூரம் அளவில் நீரில் நடந்து வந்து மதுபானங்களை வாங்கி செல்கின்றனர். டாஸ்மாக் நிறுவனமும் விற்பனைக்காக கடையை திறந்தே வைத்துள்ளது. 1 கிமீ தூரம் முட்டளவு நீர் இருந்தாலும், அதில் வந்து மதுபானம் வாங்கி செல்லும் குடிமகன்களின் ஒருவர், டாஸ்மாக் கடையை சாலைக்கு அருகில் மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

பிரதான சாலைக்கு மாற்ற கோரிக்கை:

அதாவது, முட்டளவு நீரில் வந்து செல்வதால், முதலை வந்து பிடித்துச் சென்றுவிடும் என ஐயப்படுவதாக கூறிய மதுபிரியர், கடையை உயரமான இடத்திற்கு அல்லது, சாலைக்கு அருகில் மாற்றம் செய்ய வேண்டும். நாங்கள் அவதிப்படுகிறோம். அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். வேறு வழியில்லை என தனது கோரிக்கையை முன்வைத்தார்.