செப்டம்பர் 12, சிதம்பரம் (Cuddalore News): மயிலாடுதுறை (Mayiladuthurai) மாவட்டத்தில் உள்ள நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் முகமது அன்வர் (வயது 56). இவரின் குடும்பத்தினர் யாசர் அரபாத் (வயது 40), ஷாஜிதா பேகம் (வயது 62), சாராபாத் நிஷா (வயது 30), அபலான் (வயது 2), பஷீர் அகமது, சரத் அலி. இவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் உறவினரை நேரில் சந்திக்க, காரில் சென்னை சென்றனர். Fridge Explodes: பெண்கள் தங்கும் விடுதியில் பிரிட்ஜ் வெடித்துசிதறி சோகம்; 2 பெண்கள் பரிதாப பலி.! மதுரையில் பயங்கரம்.!
ஐவர் பரிதாப பலி:
பின்னர் அனைவரும் நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்ட நிலையில், இன்று அதிகாலை கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் (Chidambaram Car Accident), பு.முட்லூர் புறவழிச்சாலையில், ஆனையன்குப்பம் கிராமம் அருகே வந்தனர். அப்போது, லாரி - கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த முகமது அன்வர், யாசர் அரபாத், ஷாஜிதா பேகம், சாராபாத் நிஷா, அபலான் ஆகியோர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. College Girl Gang Rape: கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்; காதலன் போக்சோவில் கைது..!
அதிவேகம் & தூக்கத்தால் சோகம்:
இரண்டு வாகனங்களும் பலமாக சிக்கிக்கொண்ட காரணத்தால், தீயணைப்பு படையினரின் நீண்ட போராட்டத்திற்கு பின்னரே விபத்தில் பலியானோரின் உடல்கள் மீட்கப்பட்டன. இவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், அதிவேகம் மற்றும் உறக்க கலக்கம் ஆகியவை விபத்திற்கு காரணமாக அமைந்துள்ளது தெரியவந்துள்ளது.
காவல்துறை விசாரணை:
இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 2 ஆண்கள், 2 பெண்கள், 2 வயது கைக்குழந்தை என ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் விபத்தில் பலியானது, அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.