Cuddalore Neyveli Murder Case (Photo Credit : Youtube)

ஜூலை 02, நெய்வேலி (Cuddalore News): கடலூர் மாவட்டம் நெய்வேலி, இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர் கொளஞ்சியப்பன் (வயது 63). இவரது மனைவி பத்மாவதி (வயது 55). தம்பதிகள் இருவருக்கும் பிள்ளைகள் இருக்கும் நிலையில், திருமணமாகி அவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கொளஞ்சியப்பனுக்கு அப்பகுதியை சார்ந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பழக்கத்தால் கள்ளக்காதல் ஜோடி ஊர்சுற்றி வந்த நிலையில், இதுகுறித்து பத்மாவதிக்கு தெரியவந்துள்ளது.

நள்ளிரவில் கணவனை கொன்ற மனைவி :

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாக இது தொடர்பாக காவல்நிலையத்திலும் புகாரளிக்கப்பட்டு அதிகாரிகள் தம்பதிகளுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர். இதனிடையே வீட்டில் இருக்கும் தம்பதியிடம் அவ்வப்போது குடும்பச் சண்டை நடந்து வந்துள்ளது. நேற்று வழக்கம்போல இந்த சண்டை முடிந்து கொளஞ்சியப்பன் உறங்கியிருக்கிறார். கணவர் மீது ஆத்திரத்தில் இருந்த மனைவி நள்ளிரவு நேரத்தில் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்து இருக்கிறார். வானிலை: இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. வானிலை மைய அறிவிப்பு இதோ.! 

கள்ளக்காதல் காரணமாக அரங்கேறிய கொலை :

பின் விடிய விடிய கணவரின் சடலத்துடன் இருந்தவர், காலை நேரத்தில் தனது உறவினர் ஒருவருக்கு தொடர்பு கொண்டு கணவரை கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த நபர் நெய்வேலி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கொளஞ்சியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பத்மாவதியை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கணவரின் கள்ளக்காதல் காரணமாக கொலை செய்ததாக தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.