Water Death (Photo Credit: @latestly X)

டிசம்பர் 31, திருப்பாதிரிப்புலியூர் (Cuddalore News): வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால், கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி காணப்படுகிறது. இதனால் பெற்றோர் அல்லது நீச்சல் தெரிந்தவர் துணையின்றி சிறார்களை நீர்நிலைக்கு அனுப்ப வேண்டாம். நீச்சல் தெரிந்தாலும் நீர்நிலைகளின் நிலை நீரில் மறைந்து இருக்கும் என்பதால், அப்பகுதிக்கு நீராட செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் & காவல்துறை சார்பில் பல்வேறு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு இருக்கின்றன. இருப்பினும், துணி துவைக்க, குளிக்க, மீன்பிடிக்க என நீர்நிலைக்கு செல்வோர் பலியாகும் சோகம் தொடருகிறது. இதனிடையே, குளத்தில் குளிக்கச் சென்ற 2 சிறார்கள் உயிரிழந்த சோகம் திருப்பாதிரிப்புலியூர் அருகே நடந்துள்ளது. Job Alert: அரியலூர், இராமநாதபுரம் இளைஞர்களே தயாரா? நல்ல சம்பளத்தில் உடனடி வேலை.. வேலைவாய்ப்பு முகாம்.. விபரம் இதோ.! 

குளத்தில் ஆனந்த குளியல்:

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் (Thirupathiripuliyur), நத்தவெளி பகுதியில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தில் அப்பகுதியை சேர்ந்த 2 சிறார்கள் சம்பவத்தன்று குளித்துள்ளனர். இருவருக்கும் நீச்சல் தெரியாது என கூறப்படும் நிலையில், கரையில் இருந்து குளித்தவர்கள், எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்குள் சென்று தத்தளித்து உயிரிழந்தனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் காவல்துறையினர் & தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். யூடியூப் சேனலை உருவாக்கி சம்பாத்தியம் பார்க்க ஆசையா? தமிழக அரசே பயிற்சி வழங்குகிறது - உடனே முந்துங்கள்.! 

சிறார்கள் இருவரும் பலி:

நிகழ்விடத்திற்கு விரைந்த திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர், குளத்தில் இருந்த சிறார்களின் உடல் மீட்கப்பட்டு, கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பாதிரிகுப்பம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீஹரன், நத்தவெளி கிராமத்தில் வசித்து வசித்து வரும் சரவண பாலாஜி என்பது தெரியவந்தது. மேற்படி களநிலவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. சிறார்களின் மறைவு இரண்டு குடும்பத்தார் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.