ஏப்ரல் 22, ஆத்தூர் (Dindigul News): திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், கன்னிவாடி, அமைதிச்சோலை பகுதியில் கடந்த ஏப்ரல் 13 அன்று பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பெண் யார்? யாரால் கொலை செய்யப்பட்டார்? என விசாரணையை முன்னெடுத்து வந்தனர். இந்நிலையில், உயிரிழந்த பெண்மணி மதுரையை சேர்ந்த மாரியம்மாள் என்பதும், அவர் திண்டுக்கல் (Dindigul Crime News Today) மாவட்டத்தில் உள்ள எமகாலபுரத்தைச் சேர்ந்த பிரவீன் என்பவரை காதலித்து வந்துள்ளதும் தெரியவந்தது. இருவரும் திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் தனியார் துணிக்கடையில் வேலை பார்த்து வந்த நிலையில் காதல் வயப்பட்டு இருக்கின்றனர்.

பெட்ரோல் ஊற்றி பெண் எரித்துக்கொலை:
ஓராண்டாக திண்டுக்கல்லில் இருவரும் வசித்து வந்தபோது தனிமையில் நெருங்கியுள்ளனர். இதனால் மாரியம்மாள் கர்ப்பமாகி 2 முறை குழந்தை வேண்டாம் என கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. தன்னை விரைவில் திருமணம் செய்யுமாறு பிரவீனை மாரியம்மாள் வலியுறுத்தி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஒருசில நேரம் வாக்குவாதம் உண்டாகி மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று ஆத்திரத்தில் இருந்த பிரவீன் எங்காவது சென்று வரலாம் என மாரியம்மாளை அமைதிசோலைக்கு அழைத்துச் சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்துள்ளார். முதல் நாள் மாரியம்மாளை கொலை செய்தவர், மறுநாள் உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்துகொன்றுள்ளார்.
பெற்றோர் இல்லாமல் அனாதையாக வாழ்ந்த பெண்ணுக்கு காதல் பெயரில் புதிய உறவு கிடைக்கும் என எதிர்பார்த்து எதிர்கால கனவுடன் காத்திருந்த நிலையில், அவர் தனது காதலனாலேயே எரித்துக்கொலை செய்யப்பட்ட சோகம் நடந்துள்ளது. உணர்வுத் தேவையை பூர்த்தி செய்ய எத்தனையோ வழிகள் இருக்கின்றன.
பொய்யான வாக்குறுதி கொடுத்து காதலிக்காதீர்!