செப்டம்பர் 04, ஈரோடு (Erode News): ஈரோடு மாவட்டத்தில் உள்ள மூலப்பாளையம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது . கடந்த 02ம் தேதி, இப்பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, பள்ளிக்கு அவசர கதியில் உடனடி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் குறித்து விசாரணை:
காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்து தீவிர தேடலில் ஈடுபட்டனர். அப்போது வெடிகுண்டு ஏதும் இல்லாத காரணத்தால், காவல்துறையினர் போலியான மின்னஞ்சல் அனுப்பிய நபர்கள் குறித்து விசாரணையை முன்னெடுத்தனர். Foreign Woman Rape: யோகா மையத்தில் வெளிநாட்டு பெண் பாலியல் பலாத்காரம்.. பயிற்சியாளர் கைது..!
விடுமுறைக்காக அதிர்ச்சி செயல்:
இதனிடையே, அதே பள்ளியில் வசித்து வரும் 9ம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர், மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பியது தெரியவந்தது. இதனால் மாணவர்களை கடுமையாக கண்டித்த காவல் துறையினர், அவர்களின் பெற்றோரையும் அழைத்து கண்டித்தனர். இவர்கள் இருவரும் விடுமுறைக்காக இந்த சர்ச்சை செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
1000+ மாணவர்கள் படிக்கும் பள்ளி:
எல்.கே.ஜி முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 1000க்கும் அதிகமான மாணவ-மாணவியர்கள் பயின்று வரும் பள்ளியில், விடுமுறைக்காக இரண்டு மாணவர்கள் செய்த செயல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. வேறொரு பள்ளிக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால், அந்த பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்ட செய்தியை கேட்டு, இவர்கள் இருவரும் இவ்வாறான சர்ச்சை செயலில் ஈடுபட்டது அம்பலமானது.