ஏப்ரல் 25, மணலூர்பேட்டை (Kallakurichi News): கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மணலூர்பேட்டை, ஜம்பை கிராமத்தில் வசித்து வருபவர் ஏழுமலை. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் சுப்புலட்சுமி (வயது 12), கார்த்திக் (வயது 11) என இரண்டு மகள், மகன் இருக்கின்றனர். நேற்று சகோதர-சகோதரிகள் இருவரும் சேர்ந்து வீட்டின் அருகாமையில் விளையாடிக்கொண்டு இருந்தனர். இவர்களின் வீட்டருகே உள்ள பார்த்தீபன் என்பவரின் நிலத்தில் குட்டை ஒன்றும் உள்ளது. இதனால் குட்டையில் குளிக்க சுப்புலட்சுமி மற்றும் கார்த்திக் ஆகியோர் சென்றனர். அங்கு அக்கா தனது தம்பிக்கு நீச்சல் பயிற்சி கொடுத்ததாக தெரியவருகிறது. அச்சமயம் இருவரும் குட்டையில் இறங்க, எதிர்பாராத விதமாக நீரில் தத்தளித்து மூழ்கியுள்ளனர். Whirlpool Layoff: 1000 ஊழியர்களை அதிரடியாக வீட்டிற்கு அனுப்பிய வேர்ல்பூல் நிறுவனம்; தொடர் விற்பனை சரிவால் முடிவு.! 

விரைந்து வந்து மீட்டும் பலனில்லை: இவர்களின் அபயக்குரல் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்பதற்குள் அவர்கள் நீரில் மூழ்கி மூர்ச்சையாகினர். பின் உடனடியாக அவசர ஊர்தி மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நடத்திய சோதனையில் இருவரின் மரணமும் உறுதி செய்யப்பட்டது. பின் இருவரின் உடலும் மணலூர்பேட்டை காவல் துறையினரால் மீட்கப்பட்டு, உடற்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். சகோதர - சகோதரிகள் குட்டையில் மூழ்கி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.