Chennai Weather Rains (Photo Credit: @chennaiweather X)

ஜூன் 11, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணி நேரத்தில் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. Gold Silver Price: குறைந்த வேகத்தில் 73,000ஐ நோக்கி.. படிப்படியாக உயரும் தங்கம் விலை.. விவரம் இதோ.!

இன்றைய வானிலை (Today Weather):

அதன்படி, தமிழகத்தில் 12 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பகல் 1 மணிவரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மைய அறிவிப்பு: