ஜனவரி 11, காஞ்சிபுரம் (Kanchipuram News): செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் செல்போன் உதிரி பாகம் தயாரித்து வரும் நிறுவனம் நிறுவனம் ஒன்றில் பெண் வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அக்கா வீட்டிற்கு சென்றபோது, வயிற்று வலி என கூறி இருக்கிறார். குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், நடுவழியில் தான் கர்ப்பமாக இருக்கிறேன், அதனால் வயிறு வலிக்கிறது என கூறியுள்ளார்.
கர்ப்பமாக்கி கைவிட்ட காதலன்:
இதனால் பதறிப்போன உறவினர்கள் 108 அவசர ஊர்தி உதவியுடன் பெண்ணை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் அவரை 16 வயது சிறுமி என போலியான ஆவண அட்டை கொடுத்து அடையாளம் காண்பிக்க, திருமணம் ஆகாமல் அவர் கர்ப்பமானது எப்படி? என உறவினர்கள் அதிர்ந்துபோயினர். விசாரணையில், அவர் ஒருவரை காதலித்து வந்த நிலையில், காதலன் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துவிட்டு, பின் அவரை கைவிட்டுச் சென்றது அம்பலமானது. BJP Annamalai: "அஸ்வின் கூறியது சரியே" ஹிந்தி தேசிய மொழி இல்லை - பாஜக அண்ணாமலை.!
தாய்-சேய் மாயம்:
இதனிடையே, பிரசவத்திற்கு அனுமதியான பெண்ணுக்கு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறக்க, அதிகாலை சுமார் 4 மணியளவில் கைக்குழந்தை மற்றும் பெண்ணை காணவில்லை. இதனால் அவரை தேடி உறவினர்கள் அலைந்தனர். காவல்துறையினருக்கும் தகவல் கிடைத்து, அதிகாரிகளும் விசார்ணையை முன்னெடுத்தனர். பெண்ணை கண்டறிந்து அதிகாரிகள் விசாரித்தபோது, குழந்தை இல்லை. குழந்தையை எங்கே என கேட்டபோது, பெரும் அதிர்ச்சி தகவல் வெளியானது.
ஏமாற்றிய காதலனின் பிள்ளையை நான் வளர்க்க வேண்டுமா?
அதாவது, காதலன் தன்னை ஏமாற்றிவிட்டுச் சென்றதால், அவனின் குழந்தையை வளர்க்க எனக்கு விருப்பம் இல்லை. அதனால் பாழ்ங்கிணற்றில் குழந்தையை வீசிவிட்டேன் என கூறியுள்ளார். மேலும், அவர் 23 வயதுடைய அந்த பெண், தனது 16 வயது சகோதரியின் அடையாள அட்டையை கொடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதும் அம்பலமானது. இதுதொடர்பாக பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திண்டிவனத்தை சேர்ந்த நபருடன் பெண் காதல் வயப்பட்டுள்ளார். இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளனர்.
பெண் கைது - காவல்துறை விசாரணை:
நட்பாக தொடங்கிய பழக்கம் காதலாக மாறிய நிலையில், எல்லை மீறி தனிமையில் இணைந்ததால் கர்ப்பம் அம்பலமானது. காதலி கர்ப்பமான நிலையில் காதலன் கைவிட்டுச் செல்ல, ஒல்லியான தேகம் கொண்ட பெண்மணி, ஜர்க்கின் அணிந்து கர்ப்பத்தை மறைத்து இருக்கிறார். குழந்தை கொல்லப்பட்டதால் பெண்ணை கைது செய்த காவல்துறையினர், பெண்ணின் காதலரையும் தொடர்பு கொண்டு விசாரித்து இருக்கின்றனர்.