K Annamalai | R Ashwin (Photo Credit: @ANI X / Facebook)

ஜனவரி 10, மதுரை (Madurai News): இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின்(Ravichandran Ashwin), சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, அவர் ஹிந்தி (Hindi Language) நமது தேசிய மொழி கிடையாது என்ற வாதத்தை முன்வைத்து இருந்தார். ஏற்கனவே மத்திய அரசு புதிய கல்விக்கொள்கை வாயிலாக மூன்று மொழிகளை மக்கள் படிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தும் நிலையில், இது ஹிந்தி திணிப்பு என திமுக (DMK) மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் வாதத்தை முன்வைத்து வருகின்றன. இதுதொடர்பான அரசியல் பரபரப்பு அவ்வப்போது தமிழகத்தில் பேசுபொருளாகும் நிலையில், அஸ்வினின் கருத்துக்கள் அதனை மேலும் ஊக்குவித்தது. Chennai Shocker: 14ல் காதல், 16ல் குழந்தை, கள்ளக்காதலருடன் ஓட்டம் பிடித்த சிறுமி.. அதிர்ச்சியை தரும் பகீர் சம்பவம்.! 

ஹிந்தி இணைப்பு மொழி - அண்ணாமலை:

இதனிடையே, இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை (BJP Annamalai), "ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியது சரியே. ஹிந்தி என்பது நமது தேசிய மொழி இல்லை, அண்ணாமலையும் அதனைத்தான் கூறுகிறேன். அந்த வாதத்தை அஸ்வின் மட்டும் கூறவில்லை. ஹிந்தி என்பது இணைப்பு மொழி. ஹிந்தி ஒரு வசதியான, நமது கருத்துக்களை தெரிவிக்க பயன்படும் இணைப்பு மொழி" என பேசினார்.

அஸ்வினின் கருத்துக்கு அண்ணாமலை பதில் தெரிவித்த காணொளி: