School Students (Photo Credit :@ Anbil_Mahesh X)

ஜூன் 17, மதுரை (Madurai News): மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமிகள் இருவர் 10 ஆம் வகுப்பு பயின்று வருகின்றனர். இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்து வரும் நிலையில், பள்ளிக்கு செல்ல விருப்பமின்றி இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தங்களது பெற்றோரிடமும் பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை என்று கூறி வந்தவர்கள் இருவரையும் பெற்றோர் வற்புறுத்தி பள்ளிக்கு அனுப்பியுள்ளனர்.

பூச்சிமருந்தை தண்ணீரில் கலந்து குடித்த மாணவிகள்:

இதனைத் தொடர்ந்து நேற்று வழக்கம்போல பள்ளிக்கு சென்ற மாணவிகள், செல்லும் வழியில் கடையில் எறும்புகளுக்கு போடும் பூச்சிமருந்தை வாங்கியதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் தண்ணீரில் கலந்து குடித்த (Students Poisoning) இருவரும் தங்கள் வகுப்புகளுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் சிறுமிகள் இருவரும் மயக்கமடையவே இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் உடனடியாக ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். Cuddalore Shocker: 80 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்.. கடலூரில் நடுநடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்.! 

போலீசார் விசாரணை :

இதனை தொடர்ந்து உடனடியாக பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து, மாணவிகளை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் மாணவிகள் அனுமதிக்கபட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் மாணவிகள் இந்த செயலுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.