Avaniyapuram Jallikattu 2025 Highlights (Photo Credit: @Polimernews X)

ஜனவரி 15, பாலமேடு (Madurai News): பொங்கல் 2025 பண்டிகை தமிழ்நாட்டில் வெகுவிமர்சையாக சிறப்பிக்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையில் முக்கியமானதாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் நிலையில், உலகப்புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள், ஜனவரி 14ல் தொடங்கி அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், 14 ஜனவரி 2025 அன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இன்று 15 ஜனவரி 2025 பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஆயிரத்திற்கும் அதிகமான காளையர்களும், 3 ஆயிரத்திற்கும் அதிகமான காளை அடக்கும் வீரர்களும் பங்கேற்கின்றனர். தேவையான முன்னேற்பாடுகளை மதுரை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அரசு மேற்கொண்டு இருக்கிறது. Chennai Sangamam 2025: கிராமியக்‌ கலைஞர்களுக்கு ஒரு நாள்‌ ஊதியம்‌ ரூ.5000/- : தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு.! 

பார்வையாளர்களின் கவனத்தை பெற்ற விகே சசிகலா காளை:

இந்நிலையில், நேற்றைய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில், சிறந்த காளைகள் பரிசாக, விகே சசிகலாவின் பெயரில் வாடிவாசலை கடந்து வந்த மலையாண்டி என்பவரின் காளை, சுமார் 60 வினாடிகள் (1 நிமிடம்) காளையர்களை சிதறவிட்டது. பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற அக்காளையே, இறுதியில் சிறந்த காளையாகவும் தேர்வு செய்யப்பட்டது. இந்த காளை காளையர்களை கதறவிட்ட காணொளியும் வைரலாகி வருகிறது. சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட உரிமையாளர் மலையாண்டிக்கு டிராக்டர், கன்றுடன் கறவை மாடு பரிசாக வழங்கப்பட்டது.

ஒரு நிமிடம் பார்வையாளர்களையும், காளையர்களையும் பதறவைத்த விகே சசிகலா பெயரில் விடப்பட்ட காளை:

Video Thanks: Polimer News