செப்டம்பர் 24, குருக்கத்தி (Nagapattinam News): நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர், இலுப்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜா. இவரின் மகள் 16 வயது மாணவி அஸ்வினி, திருவாரூர் பகுதியில் செயல்படும் பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமியின் சகோதரர் அவினாஷ் (வயது 10). சிறுவன் குருக்கத்தி பகுதியில் செயல்படும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறார். தினமும் மாணவி அஸ்வினி தனது பள்ளிக்கு ஸ்கூட்டியில் சென்று வருவது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று அவர் வழக்கம் போல தனது சகோதரருடன் பள்ளிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்த நிலையில், குருக்கத்தி பகுதியில் இரயில்வே கேட் அருகே, கிராம சாலையில் இருந்து பிரதான சாலைக்குச் சென்றுள்ளார். Electrocution Death: மின்சாரம் தாக்கி அக்கா-தம்பி அடுத்தடுத்து தாக்கி பலி; இறுதிச்சடங்கில் எமனாக வந்த ப்ரீசர் பாக்ஸ்.!
மாணவி பரிதாப பலி., சகோதரர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி:
அப்போது, நாகப்பட்டினம் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில், அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்து, மாணவியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் மாணவி அஸ்வினி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மாணவியின் சகோதரர் அவினாஷ், மீட்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த உறவினர்கள் மாணவியின் உடலை கட்டியணைத்து கதறியழுதது காண்போரை சோகத்திற்கு உள்ளாகியது. மேலும், விபத்தில் பலியான அஸ்வினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து சம்பவம் குறித்து விசாரணையும் நடந்து வருகிறது. பள்ளிக்கு மிக அருகில், தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு பலகை அமைக்காததே விபத்திற்கு காரணம் என உறவினர்கள் கண்ணீருடன் ஆதங்கம் தெரிவித்தனர்.