Namakkal Suicide Case (Photo Credit : Youtube )

ஜூலை 06, நாமக்கல் (Namakkal News): நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வகுரம்பட்டி பகுதியில் ஆண், பெண் தம்பதியின் சடலம் தண்டவாளத்தில் இருப்பதாக நாமக்கல் காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்தது. இதனையடுத்து நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சடலமாக இருந்த தம்பதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை செய்து கொண்டவர்கள் யார்? என்பது குறித்து அதிகாரிகள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தற்கொலை செய்து கொண்ட நபர் திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்பிரமணி என்பதும், அவருடன் அவரது மனைவி பரிமளாவும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

தாய், தந்தை உடலைக்கண்டு கதறியழுத குடும்பம் :

தம்பதிகளுக்கு சங்கீதா என்ற மகளும், ஆதித்யா என்ற மகனும் இருக்கும் நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்கொலை விவகாரம் தொடர்பாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, நேரில் வந்த குடும்பத்தினர் இருவரின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த விஷயம் குறித்து தொடர் விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர் குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் தற்கொலை செய்து கொண்டனரா?, கடன் ஏதேனும் இருந்ததா? என்பது குறித்த பல கோணத்தில் விசாரணையை முன்னெடுத்து இருக்கின்றனர்.