டிசம்பர் 27, பொன்னமராவதி (Pudukkottai News): புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி, கேசராப்பட்டி கிராமத்தில் அஞ்சல் அலுவலகம் உள்ளது. இங்கு அஞ்சல் அலுவலராக ராஜேஷ் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். தபால் துறை கணக்குகளை வைத்திருந்த உள்ளூர் கிராம மக்கள், தங்களின் கணக்குகளில் சிறுகச்சிறுக பணம் சேர்த்து இருக்கின்றனர். Rain Alert: காலை 10 மணிவரை சென்னை உட்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
ரூ.40 இலட்சம் மோசடி:
இதனிடையே, ராஜேஷ் மக்களின் பணம் சுமார் ரூ.40 இலட்சம் அளவில் மோசடி செய்ததாக சந்தேகம் எழுந்தது. இதன்பேரில் அஞ்சலகத்தில் பணம் செலுத்திய பலரும், அலுவலகத்திற்கு நேரில் சென்று போராட்டம் செய்தனர். அப்போது நடந்த விசாரணையில், மொத்தமாக ராஜேஷ் ரூ.40 இலட்சம் பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது.
பணத்தை மீட்டுத்தர கோரிக்கை:
மொத்தமாக சுமார் 20 க்கும் மேற்பட்ட அஞ்சலக கணக்குகளில் பணம் செலுத்துவோரிடம், பணத்தை பெற்றுக்கொள்ளும் ராஜேஷ், அதனை வரவு வைக்காமல் கையாடல் செய்து இருக்கிறார். இவ்வாறாக ரூ.40 இலட்சம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. தற்போது மோசடி தொடர்பான உண்மை அம்பலமாகவே, தங்களின் பணத்தை மீட்டுத்தருமாறு பாதிக்கப்பட்ட பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.