ஜனவரி 09, ராணிப்பேட்டை (Ranipet News): ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் பகுதியில், இன்று அதிகாலை லாரி - கர்நாடகா மாநில அரசுப்பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 4 பேர் பலியான நிலையில், 30 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், காயமடைந்தோரை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர். Tirupathi Stampede: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பெரும் அசம்பாவிதம்; கூட்டநெரிசலில் சிக்கி 6 பேர் பலி.! சேலம், பொள்ளாச்சியை சேர்ந்தவர்கள்..!
4 பேர் பலி., 30 பேர் படுகாயம்:
விசாரணையில், லாரி ஓட்டுநர் உட்பட 4 பேர் விபத்தில் பலியானது அம்பலமானது. அதாவது, கோலார் மாவட்டத்தில் உள்ள சீனிவாசபுரம் தாலுகா, சீகேஹள்ளி கிராமத்தில் வசித்து வரும் லாரி ஓட்டுநர் மஞ்சுநாத், துப்புரவு பணியாளர் சங்கர், உதவியாளர் சோமசேகர், வெங்கடேஸ்வரா நகர் விவசாயி கிருஷ்ணப்பா ஆகியோர் பலியானது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்றுவிட்டு, பின் மீண்டும் வீட்டிற்கு வரும் வழியில் சோகம் நடந்தது தெரியவந்துள்ளது. Tirunelveli: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; ஒருவர் கைது.!
காய்கறி லாரி - சுற்றுலா பேருந்து:
பயணிகள் பேருந்தும் - காய்கறி பாரம் ஏற்றிக்கொண்டு சென்னைக்கு பயணித்த லாரியும், நேருக்கு நேர் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. பேருந்தில் பயணம் செய்து காயம் அடைந்தவர்களின் ஓட்டுநர் பாபு, சரஸ்வத்தம்மா ஆகியோரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இவர்கள் வேலூர் சிஎம்சி, ரத்னகிரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார்.