ஜனவரி 09, திருப்பதி (Andhra Pradesh News): வைகுண்ட ஏகாதசி & சொர்க்கவாசல் திறப்பு திருவிழாக்கள் கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. இதற்கான ஆயத்த பணிகள் அனைத்தும் நடைபெற்ற நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகளை நேரில் கண்டு வர பக்தர்கள் பலரும் தயாராக இருந்தனர்.
டிக்கெட் வாங்க முண்டியடித்த கூட்டம்:
இதனிடையே, ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதி, ஏழுமலையான் கோவிலில், இன்று வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு இலவச தரிசன டிக்கெட் வழங்கும் நடைமுறை செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் ஏராளமான பக்தர்கள் நேற்று முதலாகவே இலவச தரிசன டிக்கெட்டுகளை வாங்க முண்டியடித்த இருந்தனர். டிக்கெட் இருக்கும் நபர்களுக்கு மட்டுமே சொர்க்கவாசல் பகுதி வழியாக செல்ல அனுமதி வழங்கப்படும் என்பதால், பக்தர்கள் பலரும் சொர்க்கவாசல் வழியாக சென்று வர முற்பட்டு டிக்கெட்டுக்காக காத்திருந்தனர். Woman Employee Dies: பணியிடத்தில் நடந்த மோதல்; பெண் கொடூர கொலை.. சக பணியாளர் கைது.!
தமிழகத்தை சேர்ந்தவர்களும் மரணம்:
இதனிடையே, கட்டுக்கடங்காமல் மக்கள் அதிகம் கூடிய நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் வரை உயிரிழந்துள்ளனர். சேலம், பொள்ளாச்சியைச் சேர்ந்த 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் விபரம் சேகரிக்கப்படுகிறது. மேலும், பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயம் குறித்து காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கூடுதல் காவல் துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
நேரில் வருகிறார் ஆந்திரா முதல்வர்:
கூட்ட நெரிசல் மற்றும் மரணங்களைத் தொடர்ந்து, ஆந்திர பிரதேச மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று திருப்பதி வருகை தருகிறார். அதே போல, பிரதமர் நரேந்திர மோடி இந்த விஷயத்திற்கு தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தேவஸ்தான நிர்வாகம், அதிகமாக மக்கள் கூடியது காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நாளை சொர்க்கவாசல் திறப்பு ஒட்டி, இன்று காலை 5 மணிக்கு பதில் நேற்று இரவு 8 மணிக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலில் சிக்கிய மக்கள் மீட்கப்படும் காணொளி:
Death toll reached 6 and as many as 40 injured, after stampede at ticket counter at #VishnuNivasam in #Tirupati, for #VaikuntaDwaraDarshan at the #Tirumala temple. The injured being treated in hospital.#AndhraPradesh #STAMPEDE #VaikunthaEkadashi… https://t.co/gydwZ0MdYI pic.twitter.com/GWryTns0mb
— Surya Reddy ( January 8, 2025