Kunnakudi Temple Elephant Subbulakshmi Died (Photo Credit: @BJPNach / @pudukkottai_pag X)

செப்டம்பர் 13, குன்றக்குடி (Sivaganga News): சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி (Karaikudi), குன்றக்குடியில் ஸ்ரீ சண்முகநாதன் (Shanmughanathar Temple, Kunnakudi) கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடந்த 1971ம் ஆண்டு முதல் சுப்புலட்சுமி என்ற யானை வளர்க்கப்பட்டு வருகிறது. யானை சுப்புலட்சுமி (Elephant Subbulakshmi) பக்தர் ஒருவரால் குட்டியில் இருந்து அன்பளிப்பாக வழங்கப்பட்டு வளர்க்கப்பட்டது. யானையை பராமரிக்க பிரத்தியேகமாக குன்றக்குடி மலை அடிவாரத்தில் தகரக்கொட்டாய் ஒன்றும் இருக்கிறது.

நள்ளிரவில் தீ விபத்து:

இதனிடையே, நேற்று நள்ளிரவு நேரத்தில் திடீரென கொட்டகையில் இருந்து தீப்பிடித்து எரிந்து விபத்து ஏற்பட்டது. தீயின் வெப்பம் தாங்காமல் யானை சுப்புலட்சுமி பயங்கர சப்தத்துடன் பிளிறியது. ஒருகட்டத்தில் சங்கிலியை அறுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறியது. யானையின் அலறல் சத்தம் கேட்டு விழித்த பாகன், காவலாளி ஆகியோர் தீயை அணைக்க முயன்றும் பலனில்லை. யானை தூரமாக நிற்பதை கவனித்துக்கொண்டனர். TN Quarterly Exam 2024: 6ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை.. காலாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு.. விபரம் இதோ.! 

யானை பரிதாப பலி:

இதனையடுத்து, உடனடியாக வனத்துறை மற்றும் கவல்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் யானைக்கு சிகிச்சை அளித்தனர். எனினும் யானையின் தும்பிக்கை, முகம், வயிறு, தலை, வால், பின்பகுதி ஆகிய இடஙக்ளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டு இருந்தது. இதனால் யானையின் நிலை கவலைக்கிடமாக இருந்தது. இந்நிலையில், யானை சுப்புலட்சுமி 54 ஆண்டுகள் கழித்து தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது.

காவல்துறை விசாரணை:

இந்த விஷயம் குறித்து குன்றக்குடி காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொட்டகையில் எப்படி தீப்பிடித்தது? என விசாரணை நடக்கிறது. குன்றக்குடி மக்களிடம் பிரபலமாக இருந்து வந்த யானை சுப்புலட்சுமியின் மறைவு, அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் நேரில் வந்து தங்களின் இறுதி மரியாதையை செலுத்தி வருகின்றனர்.