Sivagangai DMK Member Murder Case Accuse Visuals (Photo Credit: YouTube)

ஏப்ரல் 28, சாமியார்பட்டி (Sivagangai News Today): சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாமியார்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 27). இவர் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியில் நிர்வாகியாக இருந்து வருகிறார். உள்ளூரில் தொழிலதிபராகவும் வலம்வந்துள்ளார். இதே பகுதியைச் சேர்ந்தவர் விக்கி. இவரின் சகோதரர் தனுஷ் ராஜா. சம்பவத்தன்று தனுஷ் ராஜா பெண் ஒருவரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தனுஷ் கைதாக திமுக பிரமுகரான பிரவீன் குமார் தான் காரணம் என தனுஷ் ராஜாவின் சகோதரர் விக்கி நினைத்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பிரவீன் குமாரை கொலை செய்ய திட்டமிட்டனர், தனது நண்பர்களுடன் சேர்ந்து கொடூர செயலை அரங்கேற்றியது தெரியவந்தது. கள்ளக்காதலியின் 5 வயது மகனுக்கு பாலியல் தொல்லை.. 2 இளைஞர்களின் அதிர்ச்சி செயல்.. தமிழ்நாட்டில் இப்படியா? 

பண்ணையில் நடந்த பயங்கரம்:

பிரவீன் குமார் அவரின் தோப்பு சென்றதை கவனித்து காத்திருந்த கும்பல், பண்ணையில் வைத்து ஓடஓட விரட்டிப்படுகொலை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது. கொலை சம்பவத்தைத்தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறையினர் விக்கி (20), பிரபாகரன் (19), குரு (21) ஆகியோரை கைது செய்தனர். எஞ்சியோருக்கு வலைவீசியுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும், பிரவீன் குமார் கொலை செய்யப்பட்ட ஆத்திரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட அவரின் உறவினர்கள் திடீரென சாலையில் சென்ற பிற வாகனங்களை தாக்க முற்பட்டனர். நல்வாய்ப்பாக காவல்துறையினர் அதனை தடுத்தனர். அப்பகுதியில் லேசான பதற்ற சூழல் நிலவி வருவதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.