AIADMK Flag | Death File Pic (Photo Credit: Wikipedia / Pixabay)

செப்டம்பர் 08, சங்கரன்கோவில் (Tenkasi News): தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் (Sankarankovil) பகுதியை சேர்ந்தவர் வெள்ளியப்பன். இவர் அதிமுக முன்னாள் ஒன்றிய துணைத்தலைவராக இருந்து வருகிறார். தினமும் இவர் நடைப்பயிற்சிக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில், இன்று காலை தனது வீட்டில் இருந்து வழக்கம்போல நடைப்பயிற்சிக்கு சென்றவர், மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த விஷயம் குறித்து பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். Kanchipuram: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்; ஆர்வத்துடன் சிலைகளை வாங்கிச்செல்லும் மக்கள்.!

காவல்துறையினர் விசாரணை:

தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், வெள்ளியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, மர்ம கும்பலுக்கு வலைவீசி இருக்கின்றனர்.

குற்றவாளிகளுக்கு வலைவீச்சு:

அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால், அப்பகுதியில் லேசான பதற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், குற்றவாளிகளுக்கு வலைவீசப்பட்டுள்ளது. அவர்கள் கைதானால் மட்டுமே கொலைக்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.