
ஜூன் 11, திருத்தணி (Tiruvallur News): திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, அம்மையார் குப்பம் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர் ராஜேந்திரன். இவர் நெசவுத்தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜேந்திரனின் வீட்டருகே மர்ம நபர்கள் சிலர் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு சென்ற ராஜேந்திரன் அவர்களை தட்டி கேட்டிருக்கிறார். இந்த விஷயம் தொடர்பாக இருதரப்பிடையே வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.
வீட்டின் பின் பகுதியில் சடலமாக கிடந்த காங்கிரஸ் பிரமுகர்:
இதற்கு பின் தனது வீட்டுக்கு வந்த ராஜேந்திரன் நெசவு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் வீட்டின் பின் பகுதியில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் நேரில் வந்து அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். Sivakasi News: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 3 பேர் பரிதாப பலி.. தொடரும் சோகம்.!
போலீசார் விசாரணை :
இது தொடர்பாக ராஜேந்திரனின் உறவினர்கள் கூறுகையில், கஞ்சா கும்பல் குறித்தும் புகார் அளித்துள்ளனர். இதனால் கஞ்சா கும்பலை தட்டி கேட்டதால் காங்கிரஸ் பிரமுகர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது. முதற்கட்டமாக இந்த விவகாரத்தில் அதே பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை வழக்கில் ஒருவர் கைது :
மேலும் கஞ்சா புகைத்ததை ராஜேந்திரன் தட்டி கேட்டதால், ஹரி கிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்களால் இந்த கொலை நடத்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.