ஜூன் 11, சிவகாசி (Virudhunagar News): விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி, வடகரை பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்த நிலையில், இன்று காலை வெடித்து சிதறி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டிருந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விஷயம் குறித்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

3 பேர் பரிதாப மரணம் :

இந்த பயங்கர விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 தொழிலாளிகள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கருப்பையா, பேச்சியம்மாள் இருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில், போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு அறைகள் முற்றிலுமாக தரைமட்டமான நிலையில், படுகாயமடைந்தோர் சிவகாசி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். BigBreaking: 16 வயது சிறுமியை மது கொடுத்து கூட்டாக சீரழித்த பள்ளி மாணவர்கள்.. தமிழகத்தில் அதிர்ச்சி சம்பவம்.! 

கைது நடவடிக்கையில் போலீசார் :

மேலும் ஆலையின் போர்மேன் வீரசேகரன், உரிமையாளர் சந்திரசேகரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். முதற்கட்டமாக இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் சூப்பர்வைசருக்கு வலை வீசப்பட்டுள்ளது.